Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > மதரஸாக்களில் இனி தேசியகீதம் கட்டாயம்..!

மதரஸாக்களில் இனி தேசியகீதம் கட்டாயம்..!

25-3-22/11.02am

உத்திரபிரதேசம் : மதரஸாக்களில் இனி மற்ற தொழுகைகளுடன் சேர்ந்து தேசியகீதமும் பாடப்படவேண்டும் என உத்திரபிரதேச கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதற்க்கு பலதரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மதரஸா கல்வி வாரிய தலைவர் இப்திகார் ஜாவேத் கூறுகையில் “இன்று நடைபெற்ற வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிகளில் தேசியகீதம் பாடப்படுகிறது. மதரஸா மாணவர்களிடமும் நாங்கள் தேசபக்தியை வளர்க்க விரும்புகிறோம். இதன்மூலம் இந்திய பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

கடந்த 2017ல் மதரஸாக்களில் தேசியகீதம் இசைக்கவேண்டும் எனவும் மூவர்ணக்கொடிகளை ஏற்றவேண்டும் எனவும் யோகி அரசு ஆணையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மதரஸா ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் வாரிசுகள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவது குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நெபோட்டிசத்துக்கு முடிவுக்கட்டும் வகையில் TET தேர்வு அடிப்படையிலான MTET தகுதி தேர்வை அறிமுகப்படுத்த மதரஸா கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

இனி இதன்மூலம் வாரிசு ஆசிரியர்கள் நியமனம் தடுக்கப்படும் என்றும் தகுதியுள்ளவர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் ஜாவேத் குறிப்பிட்டார். மேலும் தேசியகீதம் பாடுவது உள்ளிட்ட முடிவுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட போவதாகவும் மீறும் மதரஸாக்கள் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

…உங்கள் பீமா