Thursday, May 21, 2026
Home > செய்திகள் > இந்தியா விட்டுவைக்காது..? யாரை எச்சரிக்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..?

இந்தியா விட்டுவைக்காது..? யாரை எச்சரிக்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..?

16-4-22/12.22PM

வாஷிங்டன் : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சான்ப்ரான்சிஸ்கோவில் ஆற்றிய உரையில் கடும் எச்சரிக்கை விடும்விதமாக பேசியுள்ளார். இது சீனாவை பதட்டமடைய செய்துள்ளது.

கடந்த 5 மே 2020ல் பாங்காங் ஏரி பகுதியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இந்தியா மற்றும் சீன ராணுவத்திற்கிடையே பெரும் மோதல் வெடித்தது. 2020 ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் பலத்த மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனத்தரப்பில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கிழக்கு லடாக் பகுதியில் மோதலை தவிர்க்க இருதரப்பிலும் 15 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக்கரை மேலும் கோக்ரா பகுதியிலும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று சான்ப்ரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் மத்திய அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங் “பூஜ்ய தொகை விளையாட்டு ராஜதந்திரத்தின் மீது புதுதில்லிக்கு நம்பிக்கை இல்லை.

ஒருநாட்டுடனான உறவு செலவில் இருக்க முடியாது. ( அமெரிக்கா ரஷ்யா மீது போட்டுள்ள பொருளாதாரத்தடையை மறைமுகமாக குறிப்பிட்டார்).சீன எல்லையில் இந்திய வீரர்களின் வீரத்தை விவரிக்க இயலாது. வீரர்கள் என்ன செய்தார்கள். நாங்கள் என்னமாதிரியான முடிவுகளை எடுத்தோம் என்பதை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது.

ஆனால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டால் யாரையும் இந்தியா விட்டுவைக்காது என்ற செய்தி சீனாவுக்கு சென்றுள்ளது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும்” என கூறினார். முன்னதாக வாஷிங்டன் டிசியில் அமைச்சர்களுக்கு மத்தியிலான சந்திப்பில் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு நேரடியான செய்திகளை தனது உரையில் தெரிவித்த அமைச்சர் இந்தியாவின் ஸ்திரத்தன்மையை அழுத்தமாக எடுத்துக்கூறியுள்ளார்.

……உங்கள் பீமா