20-3-22/8.52AM
மேற்குவங்கம் : மேற்குவங்கம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்புகையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.

ரனாகட் தொகுதி பிஜேபி எம்பியாக இருப்பவர் ஜெகன்னாத் சர்க்கார். இவர் நாடியா மாவட்டம் ஹரிங்கட்டா நகரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவரது வாகனத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்புகையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

இதுகுறித்து ஜெகன்நாத் கூறுகையில் ” நான் காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். திரும்பி வரும்வழியில் எங்கள் வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. நாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தோம். அங்கிருந்து தப்பி கொஞ்சதூரம் வந்தபின் காரிலிருந்து இறங்கி பார்த்தோம். காரின் பின்புறம் சேதமடைந்திருந்தது. வெடிகுண்டு பின்னால் வீசப்பட்டதால் தப்பித்தோம். போலீசாருக்கு தகவல் கொடுத்தும் தாமதமாகவே வந்தனர்.

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை. இங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஆர்டிக்கிள் 356 ஐ அமுல்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரவேண்டும். இல்லையெனில் இந்த தாக்குதல்கள் நிறுத்தப்படாது” என ANI செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பிஜேபி தலைவர் சுகந்தா மஜூம்தார் இங்கு பிஜேபி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். எம்பி ஜெகன்நாத் இந்த தாக்குதல் குறித்து ஹரங்கட்டா காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
…..உங்கள் பீமா
