18-3-22/21.24pm
மதுரை : கல்விநிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாக மதுரையில் போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தில் மேடையேறி பேசிய ஒருவர் ஜார்கண்ட் மாநிலம் தன்பந் மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் ஷேர் ஆட்டோ ஏற்றி படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தினார். மேலும் அவர் “கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு கோர்ட்டாவது மயிராவது. கலகத்துக்கு பிறந்த ஒருவன் பேசியது போல தான் நாங்களும் குறிப்பிடுகிறோம்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக அர்த்தம் இல்லை. உணர்ச்சிவசப்படக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். ஜார்கண்டில் நீதிபதியை ஆட்டோ ஏற்றி கொன்றுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து இருவர் சரணடைந்தார்கள். அப்போது நீதிமன்றமே கதறியது. எங்களை காப்பாற்றுங்கள் என்று. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு எழுதும் முன்னர் இந்த சம்பவத்தைநினைவில் கொள்ளவேண்டும். என்ன நடக்குமோ என்று அஞ்சவேண்டும்.
ஏதாவது ஒருவகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு விபத்தோ அல்லது கொலையோ நிகழுமாயின் அதற்க்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளே பொறுப்பு என்று சொல்லிக்கொள்கிறோம். இன்னிக்கு சாதாரண செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நாளை பிக் பிரேக்கிங் என செய்திவந்தால் அதற்கு நீதிபதிகளே பொறுப்பு.
நாங்கள் கொலைமிரட்டல் விடுத்தோம் என வழக்கு பதியபோகிறீர்களா. போடுடா. ஹிஜாபுக்கு ஆதரவாக பேசி சிறைக்கு சென்றோம் என வரலாறு பேசும்” என இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னர் உணர்ச்சிபொங்க பேசினார்.
…..உங்கள் பீமா
