Sunday, June 28, 2026
Home > செய்திகள் > இஸ்கான் கோவில் தகர்ப்பு..! துறவிகள் படுகாயம்..! இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் வெறிச்செயல்..!

இஸ்கான் கோவில் தகர்ப்பு..! துறவிகள் படுகாயம்..! இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் வெறிச்செயல்..!

18-3-22/20.49pm

பங்களாதேஷ் : கடந்த வருடம் துர்க்கையம்மன் கோவிலில் இஸ்லாமியர்களின் புனிதநூலை வைத்து வணங்கியதாக கூறி பங்களாதேஷில் உள்ள பல ஹிந்து கோவில்கள் சூறையாடப்பட்டன. அதேபோல மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் நேற்று இரவு அரங்கேறியுள்ளது.

பங்களாதேஸ் டாக்காவில் உள்ள வாரி எனும் பகுதியில் லால்மோகன் சாகா தெருவில் அமைந்துள்ள இஸ்கான் அமைப்புக்கு சொந்தமான ஸ்ரீஸ்ரீ ராதாகாந்தா கோவிலை நேற்று இரவு (17-3-22) இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் கடுமையாக தாக்கியது. இந்த படுபயங்கர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்.

HAF எனப்படும் ஹிந்து அமெரிக்கன் அறக்கட்டளை கூற்றுப்படி ஹாஜி ஷபியுல்லா எனும் 63 வயதுடைய ஹாஜி திட்டமிட்டுள்ளார். இவரின் ஆணைக்கிணங்க 150 முதல் 200 பேர் கொண்ட இஸ்லாமிய கும்பல் கோவிலை முற்றுகையிட்டது.

அங்கிருந்த விக்ரகங்களை சேதப்படுத்தியது. மேலும் கோவில் வளாகங்களை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த விலைமதிப்பற்ற பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது.

அங்கிருந்த பக்தர்களான ராஜிவ்பத்ரா நிஹார் கல்தார் மற்றும் சுமந்திர சந்திர ஷ்ரவன் ஆகிய மூன்றுபேரை அந்த கும்பல் தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஹிந்து அமைப்புகள் காவல்துறையிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


அந்த இஸ்லாமிய கும்பல் பக்தர்களை மற்றும் கோவிலை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

….உங்கள் பீமா

…..