Thursday, May 21, 2026
Home > அரசியல் > தனிமாநில கோரிக்கை..! பிஜேபி கொடுத்த ஷாக்

தனிமாநில கோரிக்கை..! பிஜேபி கொடுத்த ஷாக்

17-3-22/12.40pm

மேற்குவங்கம் : நேற்று மேற்குவங்க சட்டசபையில் மலைவிவகாரங்கள் துறை மற்றும் உள்துறை பட்ஜெட் விவாதத்தின் போது பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் தனிமாநில கோரிக்கையெழுப்பினார். அதற்க்கு மமதா தலைமையிலான அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியில் அமைந்துள்ள குர்சியோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஷ்ணு பிரசாத். இவர் நேற்று விவாதத்தின்போது ” வடக்கு வங்காளத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை. புதிய மாநிலத்தை உருவாக்குவது மட்டுமே மக்களின் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி. மலைப்பிரதேசங்களின் உரிமைகள் நீண்டகாலமாக பறிக்கப்பட்டுள்ளன.

வடவங்காளத்தில் ராஜ்பன்சிக்கள் ஆதிவாசிகள், கூர்காக்கள் என மூன்று பிரிவினரின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது. பிஜேபி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பயமுறுத்தப்படுகிறார்கள். எங்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண வடக்கு வங்கம் தனிமாநிலமாக இருக்க விரும்புகிறோம்” என குறிப்பிட்டார். பின்னர் பேசிய சுவேந்து அதிகாரியும் தனிமாநில கோரிக்கையை முன்வைத்தார்.

இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி “பிஜேபி பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது. அரசியல் காரணங்களுக்காக மேற்குவங்கத்தை இரண்டாக பிரிக்க சதிசெய்கிறது. இதற்க்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என கூறினார். மேலும் சிலமாதங்களுக்கு முன்னர் ஷர்மா மேற்குவங்கத்திலிருந்து டார்ஜிலிங் மலைகளை பிரித்து தனி கூர்காலாந்து மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என ஜெ.பி நட்டாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல அலிபுரத்துவார் எம்பியும் தனிமாநில கோரிக்கையெழுப்பியிருந்தார். மத்திய பிஜேபி அரசு மேற்குவங்க மாநிலத்தை ஆந்திராவை முன்னுதாரணமாக காட்டி பிரித்துவிடுமோ என மமதா அச்சத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மமதாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜியை பிஜேபி தூண்டிவிடுவதாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா