Sunday, June 28, 2026
Home > செய்திகள் > பிஜேபி கூட்டத்தில் கிஷோர்..! விமர்சித்த திமுக ஐடி விங்..! பதிலடி கொடுத்த சின்மயி..!

பிஜேபி கூட்டத்தில் கிஷோர்..! விமர்சித்த திமுக ஐடி விங்..! பதிலடி கொடுத்த சின்மயி..!

28-2-22/16.43pm

சென்னை : நேற்று பிஜேபி சமூகவலைத்தள கூட்டம் கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கிஷோர் கே சாமியும் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தை திமுக தொண்டர்கள் பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் திமுக ஐடி விங் பொறுப்பாளரான இசை என்பவர் ” பெண்களை அவதூறு செய்து குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்ட கீழ்த்தரமான பொறுக்கியை ஒரு பெண் அமைச்சரே அழைத்து அங்கீகரிப்பது என்ன மாதிரியான நிலைப்பாடு” என விமர்சித்திருந்தார்.

இந்த பதிவின் பின்னூட்டத்தில் பாடகி சின்மயி ” நீங்க சொல்றது சரிதான். ஆனா பாலியல் குற்றவாளியை பெண்கள் அடையாளம் காட்டினாலும் அவர்களை தலைமேல் வைத்து கொண்டாடுகிறீர்கள். திமுக டிபெரென்ட் தான் சார். நீங்கள் பெண்களை பாதுகாப்பது பற்றி ஊருக்கே தெரியும். உங்களை பெண்களை மதிப்பவர்கள் என கூறிக்கொள்ளாதீர்கள்.

என்னை தவிர இரண்டு பெண்கள் அந்த கவிஞரை பற்றி புகாரளித்தார்கள். மலேசியா வாசுதேவன் மகள் கண்முன்னே இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக க்கோரினார். ரெஹானாவும் அதையே கூறினார்” என பதிலடி கொடுத்துள்ளார்.

….உங்கள் பீமா