Friday, May 1, 2026
Home > அரசியல் > வலதுசாரியா இடதுசாரியா..? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

வலதுசாரியா இடதுசாரியா..? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

28-2-22/12.30pm

சென்னை : நேற்று தனியார் ஹோட்டலில் பிஜேபி சமூக ஊடக கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தை பிஜேபி ஐடி விங் மாநில தலைவர் நிர்மல்குமார் ஒருங்கிணைத்தார். இந்த கூட்டத்தில் தேசிய சிந்தனை கொண்ட பிஜேபி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ராணுவ மேஜரும் அரசியல் விமர்சகருமான மேஜர் மதன்குமாரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலகலப்பாக உரையாடினார்.

இந்த கூட்டத்தில் கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்படுவது குறித்தும் பிஜேபி ஆதரவாளர்கள் காவல்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாவதையும் குறித்து கெழவியெழுப்பப்பட்டது. இதற்க்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஆதாரங்களை ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் பிரிவினைவாத சக்திகள் ஊடுருவ ஒரு அங்குல இடம் கூட அளிக்காதீர்கள். எந்த ஒரு பதிவையும் ஆதாரத்துடன் பதிவிடுங்கள் என கூறினார்.

மேலும் ஜி.எஸ்.டி குறித்த கேள்விக்கு ” அந்த கவுன்சிலில் மத்திய அமைச்சர்களை விட மாநில அமைச்சர்களே அதிகம் இடம்பெற்றிருக்கின்றனர். கவுன்சிலின் ஒப்புதலுக்கு பிறகே நிதி மாநிலங்களை சென்றடைகிறது. இதை நானோ பிரதமரோ யார் நினைத்தாலும் தடுக்க முடியாது” என கூறினார். மேலும் பிட்காயினை அரசு அங்கீகரிக்கவில்லை என தெளிவுபடுத்தினார்.

இதனிடையே வலது சாரி இடதுசாரி என்கிற சொல்லாடல் குறித்து அளித்த விளக்கத்தில் ” வலது சாரி என்பதே தவறு. நாம் தேசியவாதிகள். இலவச எரிவாயு இணைப்பையோ அல்லது ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தையோ நாம் அதானிக்கும் அம்பானிக்கும் வழங்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இலவச வீடு விவசாயிகளுக்கு கடன் முத்ரா கடன் என அனைத்தும் பாமர மக்களுக்கே வழங்கப்படுகிறது.

தேசநலன் குறித்த அக்கறை கொண்ட நாம் தேசிய வாதிகள் என பெருமையுடன் கூறுங்கள். நாம் வலதுசாரிகள் இல்லை என அழுத்திக்கூறுங்கள்” என தெரிவித்தார். நிகழ்ச்சியின் முடிவில் மோடி 2.0 எனும் நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் அண்ணாமலை அவர்கள் பேசுகையில் பிஜேபி தொண்டர்களுக்கு ஒரு இடையூறு எனில் சட்டரீதியாக நாங்கள் துணைநிற்போம் என குறிப்பிட்டதோடு வருகிற ஏப்ரல் மாதம் பிஜேபி ஒரு சமூக இணையத்தளபக்கத்தை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த இணையதள பக்கம் மாநில ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் செயல்படும் என கூறப்படுகிறது. இந்த பக்கத்தில் மத்திய பிஜேபி அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடி பேசிய வீடியோக்கள் தமிழில் தரவிறக்கம் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

…..உங்கள் பீமா