Thursday, May 21, 2026
Home > அரசியல் > திமுகவுக்கு ஒட்டு சேகரித்த வெளிநாட்டவர்..! ஒரே வீடியோவில் கதறவிட்ட பாட்டி..!

திமுகவுக்கு ஒட்டு சேகரித்த வெளிநாட்டவர்..! ஒரே வீடியோவில் கதறவிட்ட பாட்டி..!

17-2-22/15.50pm

சென்னை : தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக வேட்பாளர்கள் புது புது உத்திகளை கையாண்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் சக எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மிரட்டல் மற்றும் மாதம்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் என உத்வேகமாக திமுக செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவரை வாக்கு சேகரிக்க பயன்படுத்திவருகிறது திமுக. இதுகுறித்து திமுக தொண்டர் ஒருவர் தனது பதிவில் “நான் பேருந்தில் பயணிக்கும் போது பயணச்சீட்டு வாங்கினேன் அருகில் இருந்த பெண் வாங்கவில்லை அவர் மட்டும்தான் வாங்கவில்லை என்று நினைத்தால் பேருந்தில் உள்ள அனைத்து பெண்களும் வாங்கவில்லை.

ஏன் என்று கேட்டபோதுநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு தமிழகத்தில் இலவச பயணம் என்று கூறினர். உலகில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று உள்ளேன் இதுபோன்ற திட்டத்தை நான் கண்டதில்லை எனவே நான் சுற்றுலா வந்துள்ள இந்த நேரத்தில் இங்கு நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தொண்டர் ஆக வாக்கு சேகரிப்பேன் என்று கூறி கோவையில் வாக்கு சேகரித்து வருகிறார் ருமேனிய நாட்டவர்.

உலக மக்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் வல்லமை கொண்டவர்
நமது கழக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்” என அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்க்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு மூதாட்டி ” கருணாநிதி புள்ள என்ன ஏமாத்திட்டான். 1000 தரேன்னு சொல்லி ஏமாத்திட்டானே” என கூறும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

….உங்கள் பீமா