1-02-22/10.28am
டெல்லி : 2022 க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி ஐம்பது நிமிடங்கள் ஆற்றிய உரையில் சாதனைகள் மற்றும் உலக அளவில் இந்தியாவின் சாதனைகள் பாதுகாப்புத்துறையில் மேக் இந்த இந்தியா திட்டத்தால் படைக்கப்பட்ட சாதனைகள் குறித்து உரையாற்றினார்.

மேலும் சுதந்திரபோராட்ட தியாகிகளை கூர்ந்ததோடு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். உரையில் தியாகி சுபாஷ் சந்திரபோஸ் சட்டமேதை அம்பேத்கார் பற்றியும் நினைவு கூர்ந்தார். இந்நிலையில் விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஜனாதிபதி உரை குறித்து விமர்சித்துள்ளார். அம்பேத்காரை பற்றி பேச ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்கிற ரீதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமா தனது ட்விட்டரில் “குடியரசு தலைவரின் உரை என்பது இந்திய ஒன்றியஅரசின் நோக்கங்களையும் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்துவதே ஆகும். இன்றைய உரையில்,இந்த அரசின் நோக்கம் அம்பேத்கரின் கனவை நனவாக்குவதே என கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது.
ஆதிக்குடியினர் மற்றும் பழங்குடியினரின் மீதான சாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எந்த முனைப்பையும் மேற்கொள்ளாத மோடி அரசு,
புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது நகைப்புக்குரியதாகும். நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல்களில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான தன்னல முயற்சியே ஆகும். எளியோரை ஏய்க்கும் சதியே ஆகும்” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழக்த்தின் மாபெரும் தலைவராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் திருமவிற்கு அம்பேத்கார் நினைவிடம் எங்கிருக்கிறது என்பதே தெரியாது என்பதே கசப்பான உண்மை.

பல தாசாப்தங்களாக லண்டனில் இருந்த அம்பேத்காரின் வீடு ஏலத்தில் சென்றது. பிரபல ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் கதாநாயகன் டேனியல் கிரேக் உட்பட பல பிரபலங்கள் தங்கியிருந்த அந்த வீட்டை 2019 ல் வழக்கின் மூலம் வெற்றிகண்டு அம்பேத்காரின் நினைவிடமாக அறிவித்தது பிஜேபி என மக்களுக்கு எடுத்து கூற மறந்துவிட்டார்.

மும்பையில் பிஜேபி அம்பேத்கார் ம்யூஸியம் ஒன்றை எழுப்பியது மற்றும் அம்பேத்காரின் பிறந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றியது என அனைத்தையும் அம்னீசியா வந்தது போல மறந்துவிட்டார் என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.


மேலும் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் “அம்பேத்காரை கொண்டாட பிஜேபியை தவிர யாருக்கு தகுதி இருக்கிறது. திருமாவளவன் முதலில் அம்பேத்காரை பற்றி படித்து தெரிந்துகொள்ளட்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா
