13-1-22/17.20pm
ராஜஸ்தான் : டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பை போல ஒரு கொடூரம் ராஜஸ்தானில் அரங்கேறியிருக்கிறது. இந்த பாலியல் வன்புணர்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கொலைக்கு உடந்தையாக இருந்து கற்பழிப்பில் ஈடுபட்ட சிறுவனை தையல் இயந்திரம் கொடுத்து வழியனுப்பிவைத்தது காங்கிரஸ் அரசு. அந்த குற்றவாளிகளுக்கே இங்கே சில லிபரல்ஸ்கள் வக்காலத்து வாங்கியது பெரும் கொடுமை. அப்போதே தண்டனை சட்டங்களை கடுமையாகியிருந்தால் இந்த குற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த செவ்வாயன்று இரவு 9.30 மணியளவில் டிஜாரா பாடாக் சாலையில் 14 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அதைக்கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே டாக்டர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியை கண்ட மருத்துவர்கள் மிரண்டு போயினர்.

பிறப்புறுப்பு வழியே கூர்மையான ஆயுதத்தை உள்ளே செலுத்தி மலக்குடல் இடம்மாறியிருக்கிறது. அந்த சிறுமியை நான்குபேருக்கு மேற்பட்ட கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கிறது. சிகிச்சையளிக்க வசதியில்லாததால் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு சிறுமியை இடம்மாற்றியுள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கொடூரம் என்னவெனில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு காதும் கேட்காது.வாயும் பேசவராது. மனநிலை பாதித்த சிறுமியும் கூட. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரின் நான்குபேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியை பிஜேபி தலைவர்கள் நேரடியாக சென்று சந்தித்துள்ளனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரிய அமைச்சர் மமதா பூபேஷ் மருத்துவர்களை சந்தித்து சிறுமியின் நிலைமையை கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களரின் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவியை அரசே வழங்கும் என உறுதிகொடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த இருமாதங்களில் நடக்கும் 11ஆவது கற்பழிப்பு இது என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ராகுல் ப்ரியங்கா எங்கே ஓடி ஒளிந்துகொண்டார்கள் என எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பிவருகின்றனர். இந்த சம்பவம் பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் விலாதபொருளாயிருக்கும் அப்பாவி சிறுமி பாதிக்கப்பட்டது காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் என்பதனால் அனைத்து லிபரல்ஸ் ஊடகங்களும் மௌனம் காக்கின்றன என விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா
