தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாகவே விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.
தளபதி 67 படம் டிசம்பர் மாதம் மூனாறில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லன்களாக நடிக்க சஞ்சய் தத் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வாரிசு படத்தை முடித்துள்ள விஜய், அடுத்து தளபதி 67 பட ஷூட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
