வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் முடியும் என்று சொலல்ப்படுகிறது. இதற்கிடையில் தீபாவளிக்கு முன்பாக இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த பாடல் விஜய்யே பாடிய பாடல் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தீபாவளி அன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் பாடியுள்ள பாடல் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி அந்த பாடல் ரிலீஸாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது இந்த பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
