Tuesday, April 21, 2026
Home > Cinema > வெறும் 300 ரூபாய்க்காக தன் உயிரை பறிகொடுத்த பிரபல காமடி நடிகர்!! இந்த காட்சிக்கு பின்னால் இவளவு பெரிய சோகமா!!

வெறும் 300 ரூபாய்க்காக தன் உயிரை பறிகொடுத்த பிரபல காமடி நடிகர்!! இந்த காட்சிக்கு பின்னால் இவளவு பெரிய சோகமா!!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ட்ரண்டுக்கு ஏற்ப சில நகைச்சுவை நடிகர்கள் பிரகாசமாக வாய்ப்புகளைப் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அவர்களை நம்பி சில துணைக் நகைச்சுவை நடிகர்களும் அவர்களோடு பயணிப்பார்கள். ஆனால் அவர்களுக்கான சம்பளமோ அங்கீகாரமாக போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஒரு சில ஆண்டுகளில் காணாமல் போய் விடுவார்கள்.

இப்படி பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்து மறைந்துள்ளனர். அப்படி ஒரு நடிகர்தான் கருப்பு சுப்பையாவும். கவுண்டமணி, செந்தில் படக் காமெடிகளில் பல திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர். இவர் பெரிய மருது என்ற படத்தில் கவுண்டமணியின் ஈயம் பூசும் காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சிக்காக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்காக மட்டும் உடல் முழுவதும் கோல்ட் பெய்ண்ட் அடித்து நடித்தாராம். ஆனால் அந்த பெயிண்ட் அவருக்கு ஒத்துக் கொள்ளாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் பின்னர் இறந்துவிட்டார் என நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோ பாலா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.