தமிழ் திரையுலகில் தற்போதைய நிலையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் . இன்றைய நிலையில் இவர் தான் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்.
தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும், டாப் நடிகர்களான அஜித் – விஜய் ஆகிய இருவருமே, சமூக வலைதளத்தில் அதிக ஈடுபாடு காட்டுவது இல்லை. பிரபல நடிகர் சூர்யா கூட கடந்த ஆண்டு தான், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நிலையில், இவரை தொடர்ந்து நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார் என்பது, ப்ளூ டிக் மூலம் அதிகார பூர்வமாக தெரியவந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு டிவிட்டரில் இணைந்த விஜய் அதில் பெரிதாக ஆக்டிவாக இல்லை என்றாலும் இவருக்கு 44 லட்சம் பாலோவர்ஸ் உள்ளனர் டிவிட்டரில்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இணைந்த 99 நிமிடத்தில் 10 லட்சம் ( 1million ) பாலோவர்ஸ் பெற்றார். இது உலக அளவில் 3 ஆவது அதிவேக 1 மில்லியன் .
முன்னதாக கொரியாவின் பிரபல பாண்ட் இசைக்குழுவான பிடிஎஸ் (BTS) பாடகர் வி (V) 43 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களையும், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களையும் பெற்று சாதனைப் படைத்துள்ள நிலையில், தற்போது 99 நிமிடங்களில் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று விஜய் சாதனைப் படைத்துள்ளார்.
தளபதி விஜய் பகிர்ந்த முதல் புகைப்படம்.
இன்ஸ்டாகிராமில் தளபதி விஜய் பகிர்ந்த முதல் ஸ்டோரி புகைப்படம்

