சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். பிரின்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சத்யராஜ் “படம் ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை காமெடியாக உருவாகியுள்ளதாக” தனிப்பட்ட முறையில் நண்பர்களிடம் நம்பிக்கையாக பேசியுள்ளாராம்.
