”அவர்ட்ட பேசினாலே நமக்கும் எனர்ஜி தொத்திக்கும்…” விஜய்யுடன் இருக்கும் போட்டோவைப் பகிர்ந்த மனோபாலா!
நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில ஆக்ஷன் காட்சிகளும் பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட உள்ளன. அதற்கான இறுதிக் கட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் முதலில் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இடையில் துணிவு திரைப்படமும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது வாரிசு திரைப்படம் துணிவு படத்துக்கு முன்பாக ஜனவரி 11 ஆம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சில நாட்களாக சென்னையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா விஜய்யை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் “அவருடன் 15 நிமிட பேச்சு. அவரின் எனர்ஜி முழுக்க நமக்கும் வந்துவிட்டது. அவர் இப்போதும் அதே விஜய்யாகதான் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
