Monday, May 20, 2024
Home > செய்திகள் > பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பேரணி..! சிறுவனின் முழக்கம் என்ன தெரியுமா..?

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பேரணி..! சிறுவனின் முழக்கம் என்ன தெரியுமா..?

pfi kerala

கேரளா : PFI மற்றும் SDPI அமைப்புகளை தடைசெய்யக்கோரிய வழக்குகள் பல மாநிலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக கூரப்பப்டுகிறது. மேலும் உத்திரபிரதேசம் அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் PFI அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த இரு அமைப்புகளும் தமிழகம் மற்றும் மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் கடந்த சனிக்கிழமை அன்று PFI ஒரு பேரணி நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

`

அந்த பேரணியில் கலந்துகொண்ட ஒரு சிறுவன் ஹிந்து மற்றும் கிறித்தவ மதம் குறித்து சர்சைக்குரியவகையில் முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுவன் முழக்கமிட்ட வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில் “அரிசியை தயாராக வைத்திருங்கள். மரணகடவுள் எப்போதுவேண்டுமானாலும் வரலாம். உங்கள் வீட்டிற்கும் வருவார். மரியாதையாக வாழவேண்டுமென்றால் எங்கள் இடத்தில் வாழலாம். இல்லையெனில் என்ன நடக்கும் என எனக்கு தெரியாது” என அந்த வீடியோவில் சிறுவன் கூறியுள்ளான். இதைத்தொடர்ந்து கடும்கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

```
```

இதுகுறித்து பேசிய தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ப்ரியன்க் கனுங்கோ கூறுகையில் ” இதுபோன்ற செயல்களில் சிறார்களை ஈடுபடுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதுகுறித்து எப்.ஐ.ஆர் பதிய மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுத உள்ளோம். இது கடும் குற்றம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என செய்தியாளர்களிடம் கூறினார்.



சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து PFI செய்திதொடர்பாளரான ரவூப் பட்டாம்பி செய்தியாளர்களிடம் ” இந்த முழக்கங்கள் பேரணியின்போது எழுப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட பேரணியின்போது எழுப்பப்பட்டுள்ளது. இந்த முழக்கங்கள் ஹிந்துக்களுக்கோ அல்லது கிறித்தவர்களுக்கோ எதிரானது அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.