Sunday, May 5, 2024
Home > செய்திகள் > இணையதளத்தை ஹேக் செய்த பயணி..! இதற்காகவா ஹேக்கிங்..?

இணையதளத்தை ஹேக் செய்த பயணி..! இதற்காகவா ஹேக்கிங்..?

31-3-22/9.10AM

இந்தியா : இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இண்டிகோ நிறுவன இணையதளத்தை ஹேக்கிங் செய்ததாக கூறியது இண்டிகோவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மார்ச் 27 அன்று பாட்னாவிலிருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ 6E – 185 என்ற விமானத்தில் நந்தன் குமார் என்பவர் பயணித்தார். பெங்களூருவில் தரையிறங்கியதும் தவறுதலாக சகபயணியின் லக்கேஜ் இவரிடமும் இவரது உடைமைகள் அவரிடமும் மாறியது. இதை வீட்டுக்கு சென்றதும் உணர்ந்த நந்தகுமார் நிறுவனத்தை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்.

பதிவுசெய்யப்பட்ட தானியங்கி தொழில் நுட்ப குரல் அமைப்பிடம் மட்டுமே அவரால் பேசமுடிந்தது. அவர்கள் சகபயணியின் விவரத்தை பகிரமுடியாது என பதிலளித்திருக்கிறார்கள். அதையடுத்து இண்டிகோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் புகாரளித்திருக்கிறார். மறுநாள் காலையில் பதில் வரும் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

`

உடனே நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்றவர் சகபயணியின் PNR எண்ணை பயன்படுத்தி தோண்டதொடங்கியுள்ளார்.

செக் இன், செக் அவுட் எடிட் புக்கிங் என அனைத்து ஆப்சனையும் பயன்படுத்திய அவர் ஒருகட்டத்தில் வெறுத்துப்போய் F 12 பொத்தானை அழுத்தி @indigo6e இணையதளத்தின் கன்சோலை திறந்து சகபயணியின் தொலைபேசி என் மற்றும் மெயில் விலாசங்களை எடுத்துள்ளார். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

```
```

மேலும் விமான நிறுவனத்தின் இணையதளத்தின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அறிவுரையும் செய்துள்ளார். இதுகுறித்து இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் இணயதளம் முற்றிலும் வலுவானவை. அவற்றில் சமரசம் செய்ய முடியாது. எந்தவொரு பயணியும் பி.என்.ஆர் எண்ணை பயன்படுத்தி தங்கள் முன்பதிவு மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை பெறலாம்” என கூறியுள்ளது.

ஆனால் பி.என்.ஆர் எண்ணை பயன்படுத்தி அடுத்தவர் விபரங்களை சேகரிப்பது மிகவும் ஆபத்தானது என பயணிகள் கருதுகின்றனர். இதுகுறித்த தெளிவான அறிக்கையை இண்டிகோ வெளியிடுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

….உங்கள் பீமா