கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறிய படம் பசங்க . இந்த படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்தவர் கிஷோர் . பசங்க படத்தின் கதாநாயகன் என்றே சொல்லலாம்.

பசங்க படத்திற்காக கிஷோர் தேசிய விருதையும் பெற்றார். இந்த பசங்க திரைப்படம் தான் இயக்குனர் பாண்டிராஜின் முதல் திரைப்படம். பசங்க திரைப்படத்தை சசிகுமார் தயாரித்திருந்தார்.

பசங்க படத்தின் வெற்றிக்குப்பின் கிஷோர் 8 படங்களில் நடித்தார் ஆனால் அதில் கோலி சோடா படம் மட்டுமே குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றது.


இந்த சூழலில் தான் பிரபல சீரியல் நடிகை பிரீத்தி குமாரை தான் காதலிப்பதாகவும் கூடிய விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் கிஷோர்.


நடிகை பிரீத்தி குமார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆப்பீஸ் தொடர் மூலம் அறிமுகமானார். பின்னர் பல வாய்ப்புகள் வரவே கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, பிரியமானவல், லக்ஷ்மி வந்தாச்சு, லக்ஷ்மி கல்யாணம் , வள்ளி , நெஞ்சம் மறப்பதில்லை , சுந்தரி நீயும் சுந்தரன் நானும் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.


கிஷோர் மற்றும் பிரீத்தி நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.


காதலுக்கு வயதில்லை என்பதை போல நடிகர் கிஷோர் 1994 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆனால் பிரீத்தி 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னை விட 4 வயது குறைவாக உள்ள கிஷோர் திருமணம் செய்துள்ளார் பிரீத்தி.


கிஷோர் பிரீதியின் திருமண புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.



