Tuesday, June 2, 2026
Home > Cinema > 6 மாசம் என்னோடு அட்ஜஸ்ட் பண்ணு அப்புறம் உன் லெவலே வேற…. பாலியல் தொல்லைகள் குறித்து பகீர் கிளப்பிய லாவன்யா!

6 மாசம் என்னோடு அட்ஜஸ்ட் பண்ணு அப்புறம் உன் லெவலே வேற…. பாலியல் தொல்லைகள் குறித்து பகீர் கிளப்பிய லாவன்யா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரத்தில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை லாவன்யா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் மூன்றாவது ரீப்ளேஸ்மெண்ட்டாக வந்தவர் தான் லாவண்யா. ஆனால் விஜே சித்ராவுக்கு பின்னர் அவர் தான் சரியாக செட்டானார். இதையடுத்து சமீபத்தில் இந்த தொடர் நிறைவு பெற்றது.

அந்த சீரியல் முடிவுற்றதை அடுத்து இப்போது வேறு சில தொடர்களிலும் மாடலிங் துறையிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சீரியல் வாய்ப்புக்காக அவரை இயக்குனர் ஒருவர் பாலியல் ரீதியாக அனுகியதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அதில், எனக்கு ரொம்பவே தெரிந்த ஒரு காஸ்டிங் இயக்குனர். ஒருமுறை என்னை காண்டெக்ட்டில் இருக்க சொன்னார். ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல சும்மா பேசும் காண்டெக்டாக இல்லை. அவனுடன் 6 மாதம் ஒன்றாக வாழ சொன்னான். அதுக்கு மேல் வேண்டாம் என்றான்.

அப்படி இருந்தால் நீ வேற லெவலுக்கு போய்டுவ. அது மட்டும் இல்லாமல் மீடியாவில் 3 நாள் பொண்ணுங்க பேரை சொன்னான். அவர்கள் ஒண்ணுமே இல்லாமல் இருந்தார்கள். இப்ப பாரு வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டனர் என்றான். 

இதைக் கேட்டவுடன் நான் எதுவும் பதில் சொல்லவில்லை. தேவையில்லாமல் அவரை முறைத்துக்கொண்டு என் கேரியரை வீணாக்க விரும்பவில்லை. அதனால் அதிலிருந்து நகர்ந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.