Monday, May 20, 2024
Home > செய்திகள் > ஒண்ணு நீ இருப்ப..! இல்ல நாங்க இருப்போம்..! போலீசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த “மர்ம” நபர்…!

ஒண்ணு நீ இருப்ப..! இல்ல நாங்க இருப்போம்..! போலீசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த “மர்ம” நபர்…!

15-1-22/12.30pm

உத்திரபிரதேசம் : இஸ்லாமிய பெருமக்களுக்கு உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சலுகைகள் மற்றும் இதர வசதிகள் இந்தியாவிலேயே அதிகம். ஆனாலும் லிப்ரெல்ஸ்கள் இடதுசாரிகள் மற்றும் அடிப்படைவாத குழுக்கள் இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதை போல ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றன.

ராணா அய்யூப் சரதீப் தேசாய் மற்றும் பல இடது சாரி பத்திரிக்கையாளர்கள் மற்றும் வயர் கேரவன் என்டிடிவி போன்ற செய்திநிறுவனங்களும் இதுபோன்ற ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைப்பதிலேயே குறியாய் இருக்கின்றன. இந்நிலையில் மத்திய அரசு 2022க்கான கட்டாய விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது.

அதில் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு நான்கு நாட்களும் இந்துக்களின் பண்டிகைகளான தசரா மற்றும் தீபாவளி என இரு தினங்களும் கிறித்தவ பண்டிகைகளுக்கு இரண்டு தினங்களும் ஜெயின் புத்த மற்றும் சீக்கிய பண்டிகைகளுக்கு தலா ஒரு நாளும் காந்தி பிறந்த தினத்திற்கு ஒரு நாளும் விடுமுறை என அறிவித்துள்ளது.

`

இந்துக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் இந்துக்களின் நாட்டில் இரு பண்டிகைக்கு மட்டும் விடுப்பு அறிவித்துவிட்டு இஸ்லாமிய பண்டிகைகளுக்கு நான்கு நாட்கள் விடுப்பு அறிவித்திருப்பது இந்தியாவில் இஸ்லாமியர்களின் மீதுள்ள கரிசனமும் அவர்களின் நம்பிக்கை மீது அரசு கொண்டுள்ள மதிப்பும் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு உள்ள சுதந்திரம் இந்த ஒரு வீடியோவிலேயே விளங்கும். உத்திரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் சரியான ஆவணங்கள் இன்றி சென்ற ஒரு இருசக்கரவாகனத்தை போக்குவரத்து காவலர் ஒருவர் நிறுத்தி அபராதம் விதித்தார். அதற்க்கு அந்த இளைஞர் மிரட்டும் தொனியில் ” அடுத்த முறை ஆட்சி மாறிவிடும். ஒன்று நீ இங்கு இருப்பாய். அல்லது நான் இங்கு இருப்பேன்” என பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

```
```

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஒரு வீடியோவே இஸ்லாமியர்களுக்கு இந்திய ஜனநாயகத்தில் கிடைத்திருக்கும் உரிமையை எடுத்துக்காட்டுகிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

…..உங்கள் பீமா