Wednesday, May 1, 2024
Home > செய்திகள் > இஸ்லாமியரல்லாதோருக்கும் கட்டாய ஹிஜாப்..! மருத்துவ கல்லூரியின் அடாவடி..?

இஸ்லாமியரல்லாதோருக்கும் கட்டாய ஹிஜாப்..! மருத்துவ கல்லூரியின் அடாவடி..?

28-2-22/13.42pm

பங்களாதேஷ் : பங்களாதேஷில் அமைந்துள்ள அட் தின் சகினா மருத்துவக்கல்லூரி இஸ்லாமியர் அல்லாதோரையும் ஹிஜாப் அணிய கட்டாயபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் 2010 ல் அளித்திருந்த தீர்ப்பின்படி மாணவ மாணவிகளை மத அடையாளங்களை உணர்த்தும் ஆடைகளை அணிய கட்டாயப்படுத்த கூடாது.

ஆனால் இந்த தீர்ப்பையும் மீறி இந்த மருத்துவக்கல்லூரி கடந்த வெள்ளிக்கிழமை ஹிந்து பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணியவைத்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய பங்களாதேஷ் ஜாத்யா ஹிந்து மஹா ஜோதி அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகையில் “2011ல் இந்த மருத்துவக்கல்லூரி நிறுவப்பட்டது. ஆரம்பித்த நாளில் இருந்தே ஹிஜாப் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டதாக நிர்வாகம் கூறுகிறது.

`

ஆனால் கடந்த 25 பிப்ரவரி அன்று அனைத்து மாணவிகளையும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இதை நாங்கள் நீதிமன்றம் கொண்டு செல்ல உள்ளோம். மேலும் சேர்க்கையின்போது கட்டாயப்படுத்தி எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற சில கல்வி நிறுவனங்களை அஹிஜ் குரூப் லிமிடெட் எனும் நிறுவனம் நடத்தி வருகிறது.

```
```

இந்த நிறுவனம் நடத்தும் கல்விநிலையங்களில் இதுபோன்ற புகார்கள் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசீனா தலையிடவேண்டும். இந்த பிரச்சினை குறித்து நீண்ட கால தீர்வை எடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

…..உங்கள் பீமா