Friday, January 9, 2026
Home > செய்திகள் > காஞ்சிபுரத்தில் சோகம்..! டயர் கடையாகிப்போன பழமையான சிவன் கோவில்..!

காஞ்சிபுரத்தில் சோகம்..! டயர் கடையாகிப்போன பழமையான சிவன் கோவில்..!

10-4-22/11.22AM

சென்னை : ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல புராதன கோவில்கள் அழிந்துவரும் நிலையில் உள்ளதாக பக்தர்கள் கவலை தெரிவித்துவரும் வேளையில் திமுக ஆட்சியில் கடவுள்களே மகிழ்ச்சியில் இருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் கூறியிருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பிரதான சாலையில் அமைந்துள்ள புராதன சிவன் கோவில் ஒன்று வெங்காய குடோனாக மாற்றப்பட்டு அதன் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கோவில் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் துடைக்கப்பட்டு டயர் விற்பனை நிலையமாகிப்போன சோகம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் காமராஜர் வீதி பச்சையப்பாஸ் சில்க்ஸ் துணிக்கடை அருகே உள்ள ஒரு டயர் சில்லறை விற்பனைக்கடையில் சிவபக்தர் ஒருவர் டயர் வாங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த தரையை உற்றுநோக்கியபோது அது கோவில் என கண்டறிந்துள்ளார். சிவபக்தர் கடை உரிமையாளரிடம் மேலும் கடைக்குள் சென்று பார்வையிட அனுமதி கேட்டுள்ளார். அவர் மறுக்கவே பக்தர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்பிறகு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே கோவில் அப்படியே இருக்க கோவில் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அதை வீடியோவாக எடுத்து திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் நடிகரான ஜெயம்.எஸ்.கோபி என்பவருக்கு அனுப்பியுள்ளார். ஜெயம்.கோபி அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதுடன் கோவிலை மீட்க முயற்சிகள் எடுத்து வருகிறார்.

ஹிந்து கோவில்களில் வரும் நகைகளை எப்படி எங்கே உருக்கி நிறுத்துவது என யோசிக்கும் அரசு அழிவின் விளிம்பில் இருக்கும் புராண கோவில்களை மீட்டெடுக்க முன்வருமா என பக்தர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா

follow us on

https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen