Monday, May 20, 2024
Home > செய்திகள் > இதென்னடா பித்தலாட்டம்..? வெளிச்சத்துக்கு வந்த JNUSU தகிடுதத்தம்

இதென்னடா பித்தலாட்டம்..? வெளிச்சத்துக்கு வந்த JNUSU தகிடுதத்தம்

11-4-22/10.38AM

புதுதில்லி : இந்தியாவெங்குமுள்ள மாணவர்கள் பலர் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் நுழைவு சீட்டுகிடைக்காமல் பரிதவித்துக்கொண்டிருக்க இடஒதுக்கீடு மற்றும் இன்னபிற காரணிகளால் ஜேஎன்யு போன்ற பல்கலைகழகங்களில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வித்தரத்தை மேம்படுத்த முயற்சிக்காமல் மற்ற விவகாரங்களில் மூழ்கியிருப்பதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நேற்று ராமநவமியை ஒட்டி ஏபிவிபியை சேர்ந்த மாணவர்கள் பூஜை செய்து கொண்டாடியுள்ளனர்.

அப்போது அங்குவந்த இடதுசாரி மாணவர்கள் பலர் ராமநவமி கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியதோடு அங்குள்ள மாணவ மாணவிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் பலத்த மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் 16மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.

`

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை இடதுசாரி மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆதாரங்களை சேகரிக்கவும் குற்றவாளிகளை ஆடையாளம் காணவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர். இடது சாரி மாணவர்கள் கூறுகையில் தங்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டதாகவும் அதில் கோபமுற்ற ஏபிவிபி மாணவர்கள் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவித்தனர்.

ஆதாரங்களை சேகரிக்கவும் குற்றவாளிகளை காணவும் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர். இடது சாரி மாணவர்கள் தங்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டதாகவும் அதில் கோபமுற்ற ஏபிவி மாணவர்கள் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

```
```
https://twitter.com/abvpjnu/status/1513176216240488453?t=jL1JylHzsesIO4yQtXFVmw&s=19

இதில் காயமுற்றதாக சொல்லும் ஒரு இடதுசாரிமாணவியின் நெற்றியில் பலத்தகாயம்பட்டு இரத்தம் வழிவதாக ஒரு புகைப்படம் அந்த JNSU மாணவர்களால் காண்பிக்கப்படுகிறது. அந்த மாணவியுடன் இன்னொரு ப்ளூ டாப் அணிந்த மாணவி காயமில்லாமல் காணப்படுகிறார்.

ஆனால் மருத்துவமனையில் ப்ளூ டாப் அணிந்த மாணவி காயம்பட்டு படுத்திருப்பது போலவும் நெற்றியில் காயம்பட்டமாணவி காயமில்லாமல் மற்றொரு மாணவிக்கு முதலுதவி அளிப்பதுபோலவும் முன்னுக்குப்பின் முரணான புகைப்படம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா