Monday, May 6, 2024
Home > பொழுதுபோக்கு > ஜெய் பீம் : சூர்யாவுக்கு சம்பந்தமில்லை..! ஞானவேல் ராஜாவின் புது உருட்டு..!

ஜெய் பீம் : சூர்யாவுக்கு சம்பந்தமில்லை..! ஞானவேல் ராஜாவின் புது உருட்டு..!

21-11-21/15.32pm

சென்னை : ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு சம்பந்தம் இல்லை. இதற்க்கு முழு பொறுப்பு நானே என டைரக்டர் ஞான வேல்ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ஞானவேல் ராஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் பழங்குடியின மக்கள் படும் துயரத்தை காட்ட முயற்சித்ததாகவும் உண்மைக்கதையை புனைந்து எடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த அவலங்கள் இன்னும் தொடர்வதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சூர்யாவுக்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை முழுப்பொறுப்பையும் நானே ஏற்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜாக்கண்ணு விர்பலிங்கம் பத்மினி விஜயா என பெயர்களை குறிப்பிட்ட அவர் தனது நோக்கத்தில் குறியாய் இருப்பதையே அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. படத்தில் கூறப்படும் அந்த சர்ச்சைக்குரிய வழக்கு விருத்தாசலம் பாஸ்ட் டிராக் நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு கூறியவர் பிராமண சமூகத்தை சேர்ந்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தி.

`

நீதிபதி கிருஷ்ணமூர்த்தி அளித்த தீர்ப்பை உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்றம் என இரு நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டது. இதை திரைப்படத்தில் மறைத்ததின் நோக்கம் அவர்கள் பிராமணர்கள் என்பதாலா என்ற கேள்வி சாமானியனுக்கும் வருகிறது. மேலும் இந்த வழக்கில் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இருந்த ஊராட்சி தலைவரை திரைப்படத்தில் வில்லனாக சித்தரிக்க வேண்டிய காரணம் என்றும் கேள்வியெழுப்புகிறார்கள்.

ஏதோ ஒரு பிம்பத்தை மக்களிடம் கட்டமைக்க திமுக திரைத்துறையை தனது கையிலெடுத்து திரைமறைவு வேலைகளை செய்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் சூர்யாவின் முந்தய படமான சூரரை போற்றுவில் கதாநாயகன் பிராமணன் என்பதை மறைத்து கடவுள் மறுப்பாளர் என்கிற ரீதியிலும் அவரை தாழ்ந்த சாதி என்பதால் முன்னேறவிடவில்லை என்றும் காட்டியிருப்பார்.

இதன் பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன. அதே போல சூர்யா நடித்த வேல் திரைப்படத்தில் வில்லன் வீட்டில் தேவர் அய்யா படம் இருப்பது போல காட்டியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்க்கு தேவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

```
```

எடுக்கிற திரைப்படம் எல்லாம் உண்மைக்கதை என விளம்பரம் செய்துவிட்டு கதையின் போக்கை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி பிராமணர்கள் மற்றும் வன்னியர்கள் உள்ளிட்ட சில சாதியினரை தாக்கி திரைப்படம் எடுப்பதாக நடுநிலையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உண்மை கதை எனில் கதாபாத்திரத்தின் பெயரை மாற்ற அவசியம் இருக்காது. ஆனால் உள்நோக்கத்தோடு சூர்யாவின் படங்களில் பெயர் மாற்றப்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

திராவிட திமுக ஆதரவாளரான நீதிபதி கர்ணன் இந்த வழக்கில் தீர்ப்புக்கூறி பழங்குடியின மக்களுக்கு நியாயம் வாங்கி தந்திருப்பதாக அமைத்திருக்கும் இந்த திரைக்கதையே அதன் நிஜ முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

……..உங்கள் பீமா