Wednesday, May 1, 2024
Home > செய்திகள் > காவித்துண்டுடன் களமிறங்கிய மாணவமாணவிகள்..! பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் பிஜேபி எம்பி அதிரடி..!

காவித்துண்டுடன் களமிறங்கிய மாணவமாணவிகள்..! பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் பிஜேபி எம்பி அதிரடி..!

5-2-22/16.00pm

கர்நாடகா : கர்நாடகா மாநிலம் உடுப்பி பகுதியில் உள்ள கல்லூரியில் சீருடையை தவிர்த்து ஹிஜாப் அணிந்து வந்து இஸ்லாமிய மாணவிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். அவர்களை கல்வி நிறுவனத்திற்குள் அனுமதிக்க முடியாது என நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு சீருடை என்பது பொதுவானது. இதில் மத அடையாளங்களை அனுமதிக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவ மாணவியர் காவித்துண்டு அணிந்து பள்ளி கல்லூரிக்கு செல்வது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பேசிய மைசூரு எம்பி மற்றும் பிஜேபி தலைவரான பிரதாப் சிம்ஹா “ஹிஜாப் புர்ஹா பைஜாமா தோபி என எதுவேண்டுமானாலும் அணியலாம். மதர்ஸாவுக்கு சென்று படிக்கலாம். ஆனால் கல்வி நிறுவனங்களில் இதை அனுமதிக்க முடியாது. கல்வி நிறுவனங்கள் ஒழுங்குமுறை அடிப்படையில் இயங்குகிறது. சீருடை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் சொந்த விதிகளை கடைப்பிடிக்க மதரஸா உள்ளது.

`

நீங்கள் ஷரியாவை கடைபிடிக்க விரும்பினால் அதற்காக வலியுறுத்தினால் நாங்கள் ஏற்கனவே 1947ல் உங்களுக்கென தனிநாட்டை கொடுத்துள்ளோம். நீங்கள் அங்குசெல்லலாம். இங்கு இருக்கவேண்டும் என நினைத்தால் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்க கடைப்பிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பாரதத்தின் அடிப்படை இந்து தர்மம். இந்துக்கள் மக்கா மதீனா பெத்லகேம் சென்று இந்து பழக்கவழக்கங்களை மரபுகளை கடைப்பிடிக்கிறார்களா. இஸ்லாம் மற்றும் கிறித்தவம் தொலைதூர நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவை.

இந்நாட்டின் மரபுகளை பண்பாடுகளை கேள்வியெழுப்பமுடியாது.1950களில் உள்ள சட்டப்படி இந்துக்களுக்கு சமமான உரிமையை இந்த நாடு உங்களுக்கு வழங்கியுள்ளது.இந்து என்பது இந்தியாவின் கலாச்சாரம் என்ற அடிப்படையை கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை.

```
```

உங்களால் கடைபிடிக்க முடியவில்லை என்றால் மதராசாவிற்கு செல்லுங்கள்” என அதிரடியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

…..உங்கள் பீமா