29-4-22/17.43PM
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் 22 வயது பெண் ஒருவர் நான்கு காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. சமீபத்தில் தலித் பெண் ஒருவர் விருதுநகரில் கூட்டுப்பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் புதிய பேரூந்துநிலையம் அருகே உள்ள அமைந்துள்ள ஒரு மளிகை கடையில் பணிபுரிந்துவருபவர் நிர்பயா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று இரவு அவர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக புதியபெருந்துநிலையம் நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடியரசன் என்பவர் சம்பவத்தன்று வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி அந்த பெண்ணை அழைத்திருக்கிறார்.
அந்த பெண் மறுக்கவே அவரின் செல்போனை பிடிங்கி மிரட்டியுள்ளார்.

இதனால் மிரண்டு போன அந்த பெண்ணும் அவருடன் சென்றிருக்கிறார். செல்லும் வழியில் மேட்டுப்பட்டியை தாண்டியதும் கொடியரசன் தனது இருசக்கரவாகனத்தை முந்திரிக்காட்டிற்குள் திருப்பியுள்ளார். அந்த பெண் கதறியும் விடாமல் முந்திரிக்காட்டிற்குள் இழுத்துச்சென்ற கொடியரசன் தனது நண்பர்களான தமிழரசன், சுகுமாரன், கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இரவில் தனியாக நடந்தே ஊர்வந்து சேர்ந்திருக்கிறார். உறவினர் ஒருவரின் அறிவுரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் புகாரளித்தார். அதை தொடர்ந்து வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா அவர்கள் வழக்கு பதிவு செய்து நான்குபேரையும் கைது செய்து சிறையிலடைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 506 (1),376 டி, மிரட்டல், எஸ்சி, எஸ்டி மற்றும் கூட்டுப்பாலியல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மீண்டும் ஒரு தலித் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது.
….உங்கள் பீமா