1-4-22/14.00PM
உத்திரபிரதேசம் : மாநில முதல்வராக யோகி பதவியேற்ற ஒரு வாரத்திலேயே இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரபல ரவுடியாக இருந்து பகுஜன்சமாஜ் சட்டமன்ற உறுப்பினராக மாறிய முக்தார் அன்சாரி கைதுசெய்யப்பட்டு நான்கு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் மீண்டும் முன்னாள் எம்பி மீதும் வழக்கு பதியப்பட்டலாம் என தெரிகிறது.
பகுஜன் சமாஜ் தலைவர்கள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஹாஜி யாகூப் மீரட் அருகே ஹபூர் சாலையில் அல் பஹிம் மீட்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்கிறார். இந்த நிறுவனத்தின் உரிமம் காலாவதியான பிறகு தொடர்ந்து நடத்திவருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய எஸ்பி. மிஸ்ரா “நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகிவிட்டதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய அளவிலான இறைச்சியை சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த தரம் சார்ந்த மதிப்பீடு நடைபெற்று வருகிறது. சந்தேகத்துக்குரிய மாட்டு இறைச்சியின் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் நிறுவனத்தின் பல புகார்கள் தொடர்ந்து வருவதால் ஹாஜி மீது ஆய்வக முடிவுகளை பொறுத்து வழக்கு பதியப்படும் என தெரிகிறது. ஏற்கனவே யோகி பதவியேற்றதும் ஐம்பது குற்றவாளிகள் சரணடைந்தனர். மேலும் கற்பழிப்பு குற்றவாளி ஒருவன் தனது வீட்டின் முன்னாள் ஜேசிபி நிறுத்தப்பட்டதும் போலீசில் சரணடைந்தான். யோகியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் பெரிய அளவில் இருக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா