Monday, May 20, 2024
Home > செய்திகள் > தமிழக அரசு அதிரடி உத்தரவு..! இனி தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் நிலை..?

தமிழக அரசு அதிரடி உத்தரவு..! இனி தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் நிலை..?

26-2-22/13.45pm

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலை கழகத்தை காலிசெய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூரில் அமைந்துள்ளது ஷண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (சாஸ்த்ரா). இந்த பல்கலைக்கழகம் 20.62 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக கூறி பல்கலைக்கழகத்தை வரும் மார்ச் 24க்கு முன்னர் காலி செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாகத்தின் தரப்பில் ஆக்கிரமிப்பை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலத்திற்கு ஈடாக திருமலை சமுத்திரம் கிராமத்திலுள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தை தருவதாக தமிழக அரசிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

`

1985களில் வருவாய்த்துறை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இடத்தை காலிசெய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து நிர்வாகம் உயர்நீதிமன்றத்தை நாடியது. 2018ல் நிர்வாகத்தரப்பில் அளிக்கப்பட மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் வருவாய்த்துறை அதிகாரிகள் குழு பல்கலைக்கழகத்தில் உத்தரவு நோட்டிஸ் ஒன்றை ஒட்டியுள்ளது.

```
```

இன்னும் நான்கு வார காலத்திற்குள் இடத்தை காலிசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எத்தனையோ கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வாடகை வசூல் செய்யப்படாமலும் குத்தகை எனும் பெயரில் பல ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதாகவும் தஞ்சாவூர் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பலர் இந்த பல்கலைக்கழகத்தில் தான் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா