Monday, May 6, 2024
Home > செய்திகள் > முன்னாள் முதல்வருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை..! கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

முன்னாள் முதல்வருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை..! கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

27-3-22/12.15PM

இந்தூர் : மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்ட நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் உட்பட ஆறு பேருக்கு ஒருவருட கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2011ல் பிஜேபி யுவமோர்ச்சா தரப்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2011ல் BJYM நடத்திய போராட்டத்தில் புகுந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி மற்றும் தலைவர்கள் பிஜேபி தொண்டர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகேஷ் நாத் வழக்கில் முக்கியமான தீர்ப்பை வழங்கினார்.

`

முன்னாள் உஜ்ஜைனி எம்பி பிரேம்சந்த் ஆனந்த் நாராயணன், ஜெய்சிங் தர்பார், அஸ்லாம் லாலா, திலிப் சௌத்திரி ஆகியோர் மீது 325 சட்டப்பிரிவின் கீழ் ஒருவருட சிறைத்தண்டனையும், தரானா எம்.எல்.ஏவான மகேஷ் மற்றும் முகேஷ் பாட்டி, ஹேமந்த் சௌஹான் மீது சாட்சியை கலைத்ததாக உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைவருக்கும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை வழங்கப்பட்ட கையோடு 25000 பிணைப்பத்திரத்தை வாங்கிக்கொண்டு நீதிமன்றம் அனைவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முன்னாள். முதல்வர் திக்விஜய் சிங் “அரசியல் பழிவாங்கல் காரணமாக எனது பெயர் இழுக்கப்பட்டுள்ளது. முன்னர் போலீசார் பதிவுசெய்த குற்றப்பத்திரிகையில் எனது பெயர் இல்லை” என தெரிவித்தார்.

```
```

….உங்கள் பீமா