Monday, May 20, 2024
Home > அரசியல் > சட்டமேலவை தேர்தல்..! பிரதமர் மோடியின் தொகுதியில் படுதோல்வி..!

சட்டமேலவை தேர்தல்..! பிரதமர் மோடியின் தொகுதியில் படுதோல்வி..!

15-4-22/13.42PM

உத்திரபிரதேசம் : கடந்த சட்டமன்ற தேர்தலில் அபாரவெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது பிஜேபி மீண்டும் யோகி ஆதித்யநாத் அவர்களே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே இரண்டாண்டுக்கு பிறகு நடைபெற்ற சட்டமேலவைத்தேர்தலில் பிஜேபி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.

மொத்தமுள்ள 36 மேலவைத்தொகுதிகளில் 33 தொகுதியில் பிஜேபி வெற்றிபெற்றுள்ளது. இதில் ஒன்பது இடங்களில் போட்டியின்றி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் இருவரும் ஜனசக்தா தள வேட்பாளர் ஒருவரும் வெற்றிபெற்றுள்ளனர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி படுதோல்வியடைந்துள்ளது.

மாநில சட்டமேலவையில் 67 உறுப்பினர்களை கொண்ட பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடிக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிஜேபி வேட்பாளர் சுதாமா படேல் வெறும் 170 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளர் அன்னபூர்ணா சிங் 370 வாக்குகள் பெற்று வெற்றபெற்றுள்ளார். சமாஜ்வாடி வேட்பாளர் உமேஷ் யாதவ் 345 வாக்குகள் பெற்றுள்ளார்.

`

வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள் மற்றும் வெற்றியாளரை வாரணாசி மாவட்ட நீதிபதி கவுசல் ராஜேஷர்மா அறிவித்தார். கடந்த 2016 நடந்த தேர்தலில் பிஜேபி ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை என மாநில அமைச்சர் ரத்தோர் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆகியோர் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

```
```

இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தலில் கிராமபிராதான்கள் தொகுதிமேம்பாட்டு கவுன்சிலர்கள் ஜில்லா பஞ்சாயத்து தலைவர்கள் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் வாக்களிக்கின்றனர்.

…..உங்கள் பீமா