Friday, January 30, 2026
Home > செய்திகள் > பிர்பம் படுகொலைகள்..! மமதாவை நம்பாத உயர்நீதிமன்றம்..!?

பிர்பம் படுகொலைகள்..! மமதாவை நம்பாத உயர்நீதிமன்றம்..!?

25-3-22/13.44pm

மேற்குவங்கம் : திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஷேக் என்பவர் தனிப்பட்ட விரோதத்திற்க்காக கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். 13 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர்.

அவர்கள் இறப்பதற்கு முன்னர் சராமரியாக தாக்கப்பட்டு அதன்பின்னரே தீயில் தூக்கியெறியப்பட்டிருப்பதாக உடற்கூறாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த வழக்கை எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் இன்று மமதாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மாநில காவல்துறையினரின் விசாரணை முறையற்று இருப்பதாகக் கருதும் நீதிபதிகள் இன்று வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொல்கொத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சா மற்றும் நீதியரசர் ராஜரிஷி பரத்வாஜ் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 7க்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்ததோடு மட்டுமல்லாமல் விளக்கமளிக்குமாறு மமதாவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையடுத்து பீர்பம் கிராமத்தில் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சிலரை கைதுசெய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் மமதா ஐந்துலட்சத்திற்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.

…..உங்கள் பீமா