Monday, May 20, 2024
Home > பங்குச் சந்தை > பாரத் பிஜிலி நிறுவனம்..! ஓர் அலசல்..!

பாரத் பிஜிலி நிறுவனம்..! ஓர் அலசல்..!

22-1-22/19.00pm

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரத் பிஜிலீ மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனம் இலட்ரிக் மோட்டார்கள், இன்டெக்ஸன் மோட்டார்கள், மின் சாதனங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர், மின்சார உபகரணங்கள், மின் துக்கி (எலிவேட்டர்ஸ்) மற்றும் மின்சார விநியோகம் என பல வகையான உற்பத்தி மற்றும் வர்த்தக பிரிவுகளில் இடுபட்டு வருகிறது.

1946 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் சுமார் 1400 வேலையாட்கள் உதவியுடன் 1,70,320 பரப்பளவு கொண்ட தொழிற்சாலையில் உற்பத்தி செய்து 13 மாநிலத்தில் வர்த்தகம் செய்து வருகிறது.

இந்த ஆண்டு கடந்த ஜுன் மற்றும் செப்டம்பர் காலாண்டு கால கட்டத்தில் 730 கோடி வர்த்தகம் நடந்துள்ளது. இதன் மூலம் 27 கோடி லாபம் ஈட்டியது.
டிசம்பர் காலகட்டத்தில் பல அன்னிய நேரடி முதலீடு, உள் நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலிடுகளை ஈர்த்துள்ளது.

`

பல மாநிலங்களில் இருந்து ஆர்டர்களை பெற்று செயல் படுத்தி வருகிறது. முக்கியமாக ஏலிவேட்டர்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்களின் வர்த்தகம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

கோவிட் தாக்கமும் குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் உள்நாட்டு கட்டமைப்புகள் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகதார்கள் இந்த பங்குகளை 5 வருட கால இலக்கு வைத்து வாங்கும் பட்சத்தில் 3X – 5X லாபம் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

```
```

…..சௌந்தர ராஜன் / நங்கநல்லூர்.

disclaimer : this article is only for educational purpose