Monday, May 6, 2024
Home > செய்திகள் > அண்ணாத்த பட பேனருக்கு ரத்தாபிஷேகம்..! ஏற்றுக்கொள்வாரா ரஜினிகாந்த்..? வெளியான பகீர் வீடியோ..!

அண்ணாத்த பட பேனருக்கு ரத்தாபிஷேகம்..! ஏற்றுக்கொள்வாரா ரஜினிகாந்த்..? வெளியான பகீர் வீடியோ..!

3-11-21/ 19.00pm

தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் திமுக குடும்ப பேனர் தயாரிப்பில் நாளை தமிழகமெங்கும் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இதையொட்டி பலர் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என்கிற அங்கலாய்ப்பில் ரூபாய் 2000 வரை செலுத்தி டிக்கட் வாங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய சாரதி ” தலைவா டிக்கெட் எடுத்தாச்சு” என பதிவிட்டு இலங்கை கிளிநொச்சியில் உள்ள ஒரு தியேட்டரின் பெயரை குறிப்பிட்டிருக்கிறார்.

பல சினிமா பிரபலங்களும் அண்ணாத்த படத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு திரையில் காண தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளனர். முன்பு ரஜினி நடித்த வீரா என்கிற திரைப்படம் வெற்றி பெற வேண்டி தென்காசி மாவட்டம் சுரண்டியில் ரசிகர்கள் பால்குடம் எடுத்து தியேட்டருக்கு வந்தது பரவலாக பேசப்பட்டது.

`

இந்நிலையில் தற்போது ரஜினி ரசிகர்கள் செய்திருக்கும் ஒரு செயல் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருக்கும் அண்ணாத்த பட பேனரின் முன்பு ஒரு ஆட்டை நிறுத்தி அதன் தலையை துண்டாக வெட்டி அந்த அறுபட்ட ஆட்டின் உடலிலிருந்து பேனரில் ரத்தத்தை பீய்ச்சியடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

https://twitter.com/MadrasTelegram/status/1455891312381628422?s=20

இதுபோன்ற செயல்களை தலைவர் ரஜினிகாந்த் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார். இது அவருக்கு வேதனையை தரும் சம்பவமாக அமைந்துவிட்டது. அவரது ரசிகர்கள் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவோம்.

```
```

…..ஸ்டீபன் தங்கதுரை

#annatha #superstarrajinikanth #deepavali #2021 #ரஜினிகாந்த்