Tuesday, June 2, 2026
Home > பொழுதுபோக்கு > 6 வருட காதலியை கரம்பிடிக்கும் புகழ் !! நான் சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்பட்ட காலத்தில் இருந்து என்னுடன் !! வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள் !!

6 வருட காதலியை கரம்பிடிக்கும் புகழ் !! நான் சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்பட்ட காலத்தில் இருந்து என்னுடன் !! வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள் !!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.இவரின் சொந்த ஊர் கடலூர்.இவர் பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை செய்து வந்தார். பின்னர் பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் மூலம் நடிகனாக அடையாளம் கண்டார்.இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்றார்.ஆனால் அதில் பங்கேற்ற புகழ் முதலிலேயே எலிமினேட் ஆகிவிட்டார்.

பின்னர் கம்பியூட்டர் சர்வீஸ், வாட்டர் வாஷ் வேலை செய்து வந்தார் புகழ்.பின்னர் வடிவேல் பாலாஜி மூலம் சிரிப்புடா என்ற ஷோவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் லேடி கெட்ட அப்பில் நடித்தார்.இவர் கிடைக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு அடித்த லூட்டிகள் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதன் மூலம் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 கோமாளியாக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த ஷோவில் இவர் அடிக்கும் லூட்டிகள், சேட்டைகள், கவுண்டர்கள் மக்களுக்கு மிகவும் பிடித்து போக இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.இதனை தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் நடித்தார்.பின்னர் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.

இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய், சபாபதி , யானை, அஜித்துடன் வலிமை, விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என படு பிஸியாக உள்ளார் . இந்நிலையில் வரும் 5 ஆம் தேதி 6 வருட காதலியை கரம்பிடிக்கிறார் புகழ் .

இவர் கடந்த 6 வருடங்களாக பென்சி என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். அந்த திருமணத்தின் பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.மேலும், கடந்த 2 -3 வருடங்களாக தான் புகழ் பயங்கர ட்ரெண்டிங். அதற்கு முன்னர் எல்லாம் அவரும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் கூட அவரை விட்டு பிரியாமல் அவருக்கு துணையாக இன்று வரை நின்று வந்த பென்சிக்கு வாழ்த்துக்கள்.