ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் பங்கேற்றுள்ள ஆசியக்கோப்பை தொடரானது நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் கோலாலமாக துவங்கி நடைபெற்றது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் . துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆப்கனிஸ்தான் அணி . எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது.

இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் குரூப் எ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதால் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . மேலும் கடந்த முறை நடந்ததற்கு பதிலடி தரும் முனைப்பில் உள்ளது இந்தியா அணி இந்நிலையில் இந்தியா அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் . அப்போது பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் வம்பிழுப்பது போல கேள்விகளை கேற்க அதற்க்கு சாதுர்யாமாக பதிலளித்தார் ரோஹித் ஷர்மா !!
இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் : கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் மோதியபோது இந்திய அணியின் நிலைமை என்ன ஆனது? என்பது உங்களுக்கு தெரியும். அந்த தோல்வியின் தாக்கம் இன்னும் இருக்கிறதா? அதிலிருந்து மீண்டு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு சிரித்தபடி பதிலளித்த ரோகித் சர்மா, ‘ இங்கு பாருங்கள்.. எனக்கு நியாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த விஷயங்களை என்னால் நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது. எனவே தற்போது ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் எனகூறினார்.’ இது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதோடு அந்த பத்திரிகையாளர் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து கேள்வி எழுப்பிய இந்திய ப்ளேயிங் 11 குறித்து சூ சக மாக கேட்டார். அ தில், ‘ கடந்த சில தொ டர்களில் இந்தியா புதிய ஓப்பனிங்கை மு ய ற் சித்து வருகிறது. ஏனென்றால் கே.எல்.ரா குல் அப்போது இ ல் லை. ஆனால் இந்த முறை கே.எல்.ராகுல் வந் துவிட் டதால், நேரடியாக அவர் சேர்க்கப்படுவாரா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, ‘ டாஸ் போட்ட பிறகு உங்களுக்கே அது தெரியவரும். அந்த ரகசியத்தையாவது பாதுகாக்க விடுங்கள். வித்தியாசமாக முயற்சிப்பது தான் எங்களின் நோக்கம். நாங்கள் இன்னும் அணியை முடிவு செய்யவே இல்லை. புதிய காம்பினேஷன்களை முயற்சி செய்தால் தான் அதன் பலன்களை தெரிந்துக்கொள்ள முடியும். காத்திருங்கள் என கூறினார்.
