Thursday, March 28, 2024
Home > பொழுதுபோக்கு > பெரு நிறுவனங்களால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டிய சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன்

பெரு நிறுவனங்களால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டிய சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன்

‘ரஃபி’ என்ற ரோபோ நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும். ஒரு வேளை கோபத்தோடு அதனிடம் பேசினால் மறுபடி பதில் தராது. நீங்கள் மன்னிப்பு கேட்ட பிறகே அது பதில் உரைக்கும். மேலும் நீங்கள் எந்த உணர்வோடு பேசுகிறீர்கள் என்பதையும் கண்டுபிடித்துவிடும். அப்படி ஒரு ரோபோவை கண்டுபிடித்தவர் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் பிரதீக்.

சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் பிரதீக் மனிதர்களின் உணர்வுகளை கண்டுபிடிக்கும் ரோபோவை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோவிற்கு ரஃபி என்று பெயரிட்டுள்ளார். இந்த ரோபோ மனிதர்களின் உணர்வுகளை கண்டுபிடித்து கூறும். இதனிடம் யாரும் கோபத்தோடு திட்டினால் அவர்களுக்கு பதில் தராது. மேலும் அதனிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பதில் கூறும். மனிதர்கள் சோகமாகவோ இருந்தால் அந்த ரோபோவில் சிகப்பு நிற ஒளி மிளிரும். சந்தோசம், கோபம், சோகம் போன்ற உணர்வுகளை மிக துல்லியமாக கண்டுபிடிக்கும்.

```
```
`

நெட்டிசன்கள் இந்தக்கண்டுபிடிப்பினை கண்டு வியந்து சிறுவனை பாராட்டிவருகிறார்கள். நிச்சயமாக இது பாராட்டத்தக்க கண்டுபிடிப்பு எனவும், இது கோபமான முகம் இது சந்தோசமான முகம் மற்றும் அந்த உணர்வுகளின் குரல்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்பட்டிருக்கும் எனவும் இது ஒரு பெரிய வேலை எனவும், கூகுளில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில் இதனை உருவாக்குவதற்கு மில்லியன் கணக்கில் ரோவும், கலாமும் தேவைப்படும் என்றும் மாடலாக இந்த ரோபோவை கண்டுபிடித்த சிறுவனை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்