Saturday, April 18, 2026
Home > செய்திகள் > துண்டு சீட்டைப்பார்த்து சிலாகித்துப்போன தமிழக முதல்வர்..!

துண்டு சீட்டைப்பார்த்து சிலாகித்துப்போன தமிழக முதல்வர்..!

25-4-22/13.00PM

சென்னை : தமிழ் தமிழர்கள் தமிழர்களை வாழவைப்போம் தமிழ் எங்கள் உயிர்மூச்சு என மூச்சுவிடாமல் மேடையில் பேசுபவர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது தங்கள் கட்சி சார்ந்த முடிவுகளிலோ அந்த கொள்கையை பின்பற்றுவதில்லை என்பது கண்கூடு.

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை என மேடைக்கு மேடை சத்தியம் செய்யும் எந்த கட்சியும் அதை நிறைவேற்றுவதில்லை. தமிழுக்காகவே தமிழர்களுக்காகவே பிறந்ததாக கூறும் திராவிட கட்சிகள் கூட கண்ணில் மண் தூவிப்போவதுண்டு. சமீபத்தில் காஞ்சப்புறம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செங்காடு பகுதி ஊராட்சி தலைவராக ஒரு பெண் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த பெண் தமிழை தெலுங்கில் மொழிபெயர்த்து மேடையில் வாசித்து பதவியேற்றுக்கொண்டார் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சரும் உடனிருந்தார். அந்த பெண் பேசி முடித்ததும் அந்த துண்டுசீட்டை வாங்கி பார்த்த தமிழக முதல்வர் ஏதோ கேட்க அந்த பெண்ணும் மிக மெதுவாக ஏதோ சொல்லிவிட்டு அமர்ந்தார். அதேசமயத்தில் அந்த பெண்ணிடம் இருந்ததை போல ஒரு துண்டுசீட்டையும் தமிழக முதல்வர் கையில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா