23-4-22/8.53AM
கர்நாடகா : அயோத்தி உட்பட பல நகரங்களில் கோவில்கள் இடிக்கப்பட்டு அல்லது மறுசீரமைக்கப்பட்டு மசூதியாக திகழ்கிறது என்ற கருத்து நிலவிவருகிறது. இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த இருதினத்திற்கு முன்னர் பிரபல தொல்லியல் ஆய்வாளர் கே.கே.முஹம்மது 27 கோவில்களை இடித்துவிட்டுத்தான் குதுப்மினார் கட்டப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவின் அருகே உள்ள மலாலி பகுதியில் அமைந்துள்ள ஜும்மா மசூதியை அதன் நிர்வாக அதிகாரிகள் மறுசீரமைத்து வருகின்றனர். பணியாளர்கள் கட்டிடத்தை தகர்க்கும்போது அலங்கரிக்கப்பட்ட தூண்களுடன் கூடிய ஹிந்து கோவில்கள் போன்ற அமைப்பு காணப்பட்டது. இந்த மசூதிக்குள் கோவில் போன்ற அமைப்பு இருப்பதால் முன்பு இது கோவிலாக இருந்திருக்கலாம் என ஊர்மக்கள் கருதுகின்றனர்.
இதைத்தொடர்ந்து மசூதி என கூறப்படும் அந்த இடத்தின் ஆவணங்களை சரிபார்க்கும்வரை மறுசீரமைப்பு பணியை நிறுத்திவைக்க உத்தரவிடுமாறு மாவட்ட நிராவகத்தை விஹெச்பி அணுகியுள்ளது. இருந்தபோதிலும் தட்சிணா கன்னட நிர்வாக அலுவலகம் மறு உத்தரவு வரும்வரை தற்போதைய நிலையே தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் மக்கள் அமைதி காக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தட்சிணகன்னடா நகராட்சி துணை ஆணையர் கே.வி ராஜேந்திரன் ” இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட நிர்வாகம் பழைய நிலப்பத்திரங்கள் அதுகுறித்த பதிவுகள் மற்றும் உரிமை விவரங்கள் குறித்து ஆய்வுநடத்தி வருகிறது. அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்திடமிருந்து அறிக்கைகள் பெற்றபின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
…..உங்கள் பீமா
