Sunday, May 3, 2026
Home > செய்திகள் > மதுரையில் சோகம்..! இருவர் பலி..! 7 பேர் படுகாயம்

மதுரையில் சோகம்..! இருவர் பலி..! 7 பேர் படுகாயம்

16-4-22/12.57PM

மதுரை : மதுரையில் இன்று காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர். கொரோனா தொற்றால் பொதுமக்கள் கூடுவதற்கு இரண்டுவருடமாக தடை நீடித்து வந்த வேளையில் தற்போது கட்டுப்பாடுகள் முற்றிலும் அகற்றப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு கள்ளழகரை காண அனுமதி கிடைத்ததால் இந்த வைபவத்தை காண பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர்.

இந்நிலையில் வைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருப்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. அதனால் கூட்டம் தடுக்கப்பட்ட பகுதிகளை சுற்றிவந்தது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முடிந்து திரும்பும் போது ஸ்வாமியை காண மக்கள் முண்டியடித்து முன்னேறினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அந்த இடமே கூச்சலும் கதறலும் என போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் ஏழுபேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிகிறது.

காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சமும் படுகாயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டுலட்சமும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு ஒருலட்ச ரூபாயும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

….உங்கள் பீமா