Thursday, May 21, 2026
Home > செய்திகள் > தேர்தல் ஆணையத்தின் புதுமுயற்சி..? அசந்து போன திருச்சி வாக்காளர்

தேர்தல் ஆணையத்தின் புதுமுயற்சி..? அசந்து போன திருச்சி வாக்காளர்

11-4-22/11.39AM

FlashNews : பஞ்சாப் மாநில காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சைபர்க்ரைம் போலிசார் மீட்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 500 க்கு மேலான ட்வீட்டுகள் பதிவு.

திருச்சி : தேர்தல் ஆணையம் வாக்காளரின் புகைப்படம் இல்லாமலேயே வாக்காளர் அட்டையை விநியோகித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மன்னார்புரம் செங்குளம்காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த குடியிருப்பு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் இடித்து தகர்க்கப்பட்டது. அதன்பின்னர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார் விக்னேஷ்.

அதனால் தனது வாக்காளர் அட்டையை புதுப்பிக்கவேண்டி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். திருச்சி மாநகர் தேர்தல் ஆணைய பிரிவு அதிகாரிகள் விக்னேஷின் விண்ணப்பத்தை பரிசீலித்து முகவரி மாற்றம் செய்ய பரிந்துரைத்தனர். பின்னர் முகவரி மாற்றம் செய்யப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் வந்தடைந்தது.

தபாலை பிரித்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக பலவண்ணங்களில் கோடுகள் மட்டும் இருந்துள்ளது. இதுகுறித்த புகாரளிக்க திருச்சி மாநகராட்சி தேர்தல் பதிவு அதிகாரியின் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளார்.

அந்த எண் செயல்படவில்லையென்பதால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். பின்னர் நேரடியாக அலுவலகம் சென்று புகாரளித்தார். இது அந்த பகுதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதிகாரிகளின் மெத்தனப்போக்கை எடுத்துக்கட்டும்விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளதாக திருச்சி பகுதி மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா