6-4-22/10.42AM
ஹரியானா : விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிஜேபி தற்போது விஐபி பதிவெண்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிகாரபூர்வமாக இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை வெளியிட்டார்.
ஹரியானா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மோட்டார் வாகன விதிகள் 1993ல் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் இனி விஐபி வாகனங்களின் பதிவெண்களும் மின் ஏல முறையில் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது நான்கு பாதுகாப்பு வாகனங்களின் எண்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த அறிக்கைக்கு பின் தங்கள் வாகனங்களுக்கு பேன்ஸி எண்ணை வாங்க விரும்பும் பொதுமக்கள் தற்போது 179 மாநில அரசின் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விஐபி எண்களை வாங்க வழிவகை செய்துள்ளது. இதன்மூல மாநில அரசு 18 கோடி வருவாய் ஈட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹரியானா மோட்டார் வாகனங்கள் 2022 திருத்தப்படி போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு மின் ஏலத்தின் மூலம் முன்னுரிமை பதிவு எண்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் ஹரியானா மாநிலத்தின் தலைநகராக சண்டிகார் தொடரும் என தீர்மானம் முதல்வர் மனோகர் லால் அவர்களால் நிறைவேற்றப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதலும் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்தவாரம் பஞ்சாப் முதல்வர் பகவந் மான் சண்டிகரை பஞ்சாப்புடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா
