Sunday, May 3, 2026
Home > செய்திகள் > பிஜேபி பிரமுகர் கல்யாணராமன் விடுதலை..! வழக்கு விபரங்கள்

பிஜேபி பிரமுகர் கல்யாணராமன் விடுதலை..! வழக்கு விபரங்கள்

1-4-22/13.12PM

சென்னை : கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிஜேபி பிரமுகர் கல்யாணராமன் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் மீது குண்டாஸ் போடப்பட்டது. இது கல்யாணராமன் மீது போடப்பட்ட இரண்டாவது குண்டாசாகும்.

கடந்த அக்டோபரில் நள்ளிரவில் கல்யாணராமன் வீடுபுகுந்த காவல்துறை அவரை அதிகாரதுஷ்பிரயோகத்தின் மூலம் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த பிஜேபி பெண் நிர்வாகியை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. 2021 அக்டோபர் 17 அன்று விடுதலைச்சிறுத்தை கட்சியை சேர்ந்த கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அவரை கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சைதாப்பேட்டை நீதிமன்ற காவலில் 15 நாள் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே முடிந்துபோன பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதிதாக ஐந்து வழக்குகள் பதியப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரை கடலூர் சிறைக்கு மாற்றினர்.

அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறி பலதடவை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆறுமாத காலத்திற்கும் மேலாக அரசு தரப்பில் வாய்தா வாங்கியே காலம்தாழ்த்தியதாக கல்யாணராமன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோதும் வாய்தா வாங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் கல்யாணராமனை விடுவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தள்ளிப்போன இந்த வழக்கு இன்று நீதிபதி ஏ.என்.பிரகாஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதியரசர் வழங்கிய தீர்ப்பில் கல்யாணராமன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கின் வாதாடு விபரங்கள் நாளை வெளியாகும் என தெரிகிறது.

….உங்கள் பீமா