29-3-22/11.32AM
கேரளா : கேரளாவை மையமாக கொண்டு இயங்கிவரும் மீடியா ஒன் என்கிற செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தை ஜமாஅத் ஈ இஸ்லாமி ஹிந்த் எனும் அமைப்பு நடத்திவருவதாக கூறப்படுகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பை இந்திய அரசு 1975 மற்றும் 1992களில் இரண்டுதடவை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீடியா ஓன் நிறுவனத்தைப் பற்றிய உளவுத்துறை அறிக்கையின் பெயரில் செய்தி நிறுவனத்தின் அப்லிங் மற்றும் டவுன்லோட் லிங்க் இரண்டையும் நிறுத்தியது மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம். அதைத்தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தை நாடியது இஸ்லாமிய அமைப்பு. உயர்நீதிமன்றம் மத்திய அரசின் தடை தொடரும் என உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தை நாடிய அமைப்பு இதுகுறித்து அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கியது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நேற்று வந்தது. நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் சூர்யகாந்த் கொண்ட அமர்வு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது.

செய்திநிறுவனம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தாக்கல் செய்த மனுவுடன் நோட்டிஸ் ஒன்றை டேக் செய்து மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ” பல்வேறு உளவுத்துறை ஏஜென்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மத்யமம் ப்ராட்காஸ்டிங் லிமிடெட் மீது பல புகார்கள் குவிந்துள்ளன” என குறிப்பிட்டனர்.
தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பின் மத்திய தொடர்புடையதாக கூறப்படும் செய்திநிறுவனத்தின் உரிமையை நாட்டின் பாதுகாப்பு கருதி அரசு தடைசெய்யும் வேலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த செயல் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

மேலும் நீதிபதி சந்திரசூட் ” மெரிட்டில் வருபவர்களால் பாகுபாடு ஏற்படுகிறது. ஆதிக்க மனப்பான்மையுடையவர்களே அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள்” என்று பொருள்படும்படி பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா
