Sunday, April 19, 2026
Home > செய்திகள் > ட்விட்டர் பதிவை நீக்கிய எம்பி.கனிமொழி..? தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆவேசம்..!

ட்விட்டர் பதிவை நீக்கிய எம்பி.கனிமொழி..? தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆவேசம்..!

22-3-22/14.34pm

சென்னை : பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அதை நீக்கிவிட்டு மீண்டும் ஒரு சில வார்த்தையை மாற்றி பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விருதுநகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்(27). திமுக பிரமுகர். அதே பகுதி கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்த 22 வயதான தலித் பெண்ணுடன் பழகிவந்துள்ளார். இருவரும் ஹரிக்கு சொந்தமான பெத்தனாட்சி நகரில் இருக்கும் மருந்து குடோனில் உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இந்த சம்பவத்தை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த ஹரி தனது நண்பர்களான ஜுனைத் உள்ளிட்ட ஏழுபேருக்கு காண்பித்துள்ளார்.

பின்னர் அதைக்காட்டி மிரட்டி அப்பாவி தலித் பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே நான்கு சிறுவர்கள் உட்பட எட்டுபேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எம்பி.கனிமொழி முதலில் தலித் பெண்ணை என்ற வார்த்தையை சேர்த்திருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே பதிவை நீக்கிவிட்டு அந்த தலித் என்கிற வார்த்தையை நீக்கிமீண்டும் பதிவிட்டுள்ளார்.

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது ட்விட்டரில் “விருதுநகரில் ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து 22 வயதுப்பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த அவலச்செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன்.

இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக செயல்பட்டது திமுக பிரமுகர். இந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியம். தனது கட்சிக்காரர்களின் பிடியில் இருந்து காவல்துறை சுதந்திரமாக செயல்பட முதல்வர் அனுமதிப்பாரா” என ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

…..உங்கள் பீமா