Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > கேரளாவில் பயங்கரம்..! குத்திகொல்லப்பட்ட பிஜேபி இளைஞரணி பிரமுகர்..!

கேரளாவில் பயங்கரம்..! குத்திகொல்லப்பட்ட பிஜேபி இளைஞரணி பிரமுகர்..!

12-3-22/10.55am

கேரளா : இந்தியாவில் மேற்கு வங்கத்தை அடுத்து அரசியல் படுகொலைகள் அதிகம் நடைபெறும் இடம் கேரளா என அறியப்படுகிறது. மாதம் தவறாமல் அங்கு கொலை விழுவது சர்வசாதாரண நிகழ்வாகிப்போயிருக்கிறது. ஆனால் முதல்வர் பினராயி மற்றும் காவல்துறை தரப்பில் இந்த குற்றசாட்டை முழுவதுமாக மறுக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் இது ஆறாவது அரசியல்ரீதியான கொலை என கூறப்படுகிறது. ஆலப்புழா மாவட்டம் பழம்பலக்கோடு கிராமத்தில் வசிப்பவர் அருண்குமார். இவர் பிஜேபி இளைஞரணி பிரமுகர். கடந்த மார்ச் 2 ஆண்டு கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த நேரத்தில் அங்குவந்த சிபிஎம் கட்சியைசேர்ந்த இளைஞர்கள் அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் மறைத்துவைத்திருந்த கத்தியால் அருணை பலமுறை குத்தியிருக்கின்றனர். இதில் நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்த அவரை நென்மாரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த எட்டுநாட்களாக அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுபேரை காவல்துறை கைதுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெருங்காட்டுக்குரிசி ஆலத்தூர் கொட்டாயி பகுதி கிராம பஞ்சாயத்துகளில் இன்று பொதுமக்கள் மற்றும் பிஜேபியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் குறிவைத்து கொல்லப்படுவது பரபரப்பை கிளப்பியுள்ளது.

…..உங்கள் பீமா