9-2-22/11.42am
கர்நாடகா : சில அடிப்படைவாதிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மறைமுக தூண்டுதலால் ஹிஜாப் பிரச்சினை பூதாகரமாக கிளப்பப்பட்டுள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக தவறான உள்நோக்கத்துடன் கூடிய செய்திகளை எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு சேனல்களான டைம்ஸ் நவ் சன் உள்ளிட்ட செய்திநிறுவனங்கள் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சினை எழுந்ததையொட்டி மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மூன்றுநாட்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே இஸ்லாமிய மாணவி ஒருவரை காவி துண்டு அணிந்த மாணவர்கள் துரத்தியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் மதவாத சிந்தனை கொண்ட சில மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட கல்லெறி சம்பவத்தில் ஹிந்து மாணவி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
இதைமறைக்கவே எதிர்கட்சிகள் மற்றும் அதன் ஆதரவு சேனல்கள் செய்தியை திசைதிருப்புவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் மாணவர்கள் தேசியக்கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடி ஏற்றியதாக சன் டிவி உட்பட பல ஆங்கில சேனல்கள் செய்திகளை ஒளிபரப்பின. ஆனால் அனிகா கம்பத்தில் தேசிய கொடி இல்லை என்பதும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்படும் என்பதை மறைத்து செய்திகளை உள்நோக்கத்தோடு வெளியிட்டிருக்கின்றன இந்த நிறுவனங்கள்.
கொடியை ஏற்றுவதுபோல காட்டப்படும் வீடியோவில் தேசியக்கொடியை கழற்றி எறிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் காணொளியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமார் கூறிய பொய்யை நம்பி சில சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா
