Saturday, October 5, 2024
Home > செய்திகள் > பாட்டி வைத்திருந்த பழமையான தேசிய கொடி..!! உண்மையை அறிந்த குடும்பம் வைரல் ஆன புகைப்படங்கள்..!! மதிப்பு என்ன ?

பாட்டி வைத்திருந்த பழமையான தேசிய கொடி..!! உண்மையை அறிந்த குடும்பம் வைரல் ஆன புகைப்படங்கள்..!! மதிப்பு என்ன ?

வயதான பாட்டி ஒருவர் 40 வருடங்களாக தேசிய கொடியை பாதுகாத்து வந்துள்ளார். அந்த தேசிய கொடியை வெளியே எடுக்கப்போய் அதை பற்றிய உண்மைகள் அவரின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அந்த கதையை கேட்டு குடும்பத்தில் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் நாள் 75வது சுதந்திர தின விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக அனைவரும் தங்களது வீட்டில் மூவர்ண தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதனால் மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை விமர்சியாக கொண்டாடினர்.

`

இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கிரோன் ராஜ்ஹோவா என்பவர் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது அவரின் பேத்தி தனக்கு ஒரு தேசிய கொடி வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது தனது வீட்டில் பழைய அலமாரியில் இருக்கும் கொடி பற்றிய ஞாபகம் வந்துள்ளது. கிரோன் அலமாரியை திறந்து தேசிய கொடியை வெளியே எடுத்துள்ளார்.

```
```

அதை பார்த்த அவரின் மருமகள் டோலி கோகோய் ராஜ்கோவா விற்கு சந்தேகம் வந்துள்ளது. ஏனென்றால் அந்த கொடி தற்போது உள்ள கொடி போல்
இல்லாமல் வித்தியாசமாக இருந்துள்ளது.அந்த தேசிய கொடியில் அசோக சக்கரத்திற்கு பதிலாக ராட்டை இருந்து உள்ளது. அதனால் அந்த கொடியை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவு வைரலானது.

இந்த தேசிய கொடி 90 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப் படுகிறது. இந்த கொடி அசாமில் சருபதேர் என்றகிராமத்தில் பொத்மேஷ்வர் ராஜ்கோவாவிடம் இருந்துள்ளது.சுதந்திர போராட்ட தியாகியான அவர் 1931 ஆம் ஆண்டு இந்த கொடியை பயன்படுத்தி உள்ளார்.இதை பற்றி டோலி கோகோய் ராஜ்கோவா இது நாங்கள் எதிர்பாராத கதை என்று தனது பதிவில் கூறியிருந்தார்.