Friday, January 9, 2026
Home > செய்திகள் > இந்திய தயாரிப்பான கோவாக்சினுக்கு தடை..! WHO அறிவிப்பு

இந்திய தயாரிப்பான கோவாக்சினுக்கு தடை..! WHO அறிவிப்பு

3-4-22/ 12.00PM

புதுதில்லி : இந்திய தயாரிப்பான கோவாக்சினுக்கு தடைவிதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து WHO நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “EUL ஆய்வின்படி அதன்விளைவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த இடைநீக்கம் செயல்படுத்தப்படுகிறது. அடையாளம்காணப்பட்ட GMP குறைபாடுகள் மற்றும் ஏற்றுமதிக்கான உற்பத்தி நிறுத்தப்படுவதால் கோவாக்சின் விநியோகத்தில் தடை ஏற்படும்” என அறிவித்துள்ளது.

மேலும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் மற்றும் WHO இணைந்து திருத்தம் மற்றும் தடுப்பு செயல்பாட்டு திட்டத்தை உருவாக்கி வருகிறது.இடைக்கால மற்றும் முன்னெச்சரிக்கை அடிப்படையில் ஏற்றுமதிக்கான உற்பத்தியை பரத் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஐநா முகமைகள் மூலம் கோவாக்சின் தடுப்பு மருந்தை வாங்கி உலகநாடுகளுக்கு விநியோகித்து வந்தது WHO என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 1 அன்று பாரத் பயோடெக் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தலுக்காக கோவேக்சின் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்துள்ளோம். இனி வரும்காலங்களில் வசதிபராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளோம்” என தெரிவித்திருந்தது. இது மெடிக்கல் மாபியாக்களின் லாபியால் பின்னப்பட்ட வலை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா முன்பு ஒரு கூட்டத்தில் ” இந்திய மருந்துகளை விற்பனை செய்வதிலும் தயாரிப்பதிலும் நமது நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முட்டுக்கட்டை போட்டுவருகின்றன. நமது தயாரிப்புகளுக்கு எதிராக பல வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படத்தொடங்கியுள்ளன” என கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

….உங்கள் பீமா